Tuesday, November 17, 2009

உன் வருகைக்காய்...

உன்னில் நான் ஏன்
அன்பு கொண்டேன்?
அடிக்கடி என் மனதை
விடைதேட வினாவுகிறேன்
இன்றுவரை பதில் இல்லை

ஆதலால் அன்பே
நான் உன்னை விட்டு
நீண்ட தூரம் போக
எத்தணித்து அதை

உன்னிடம் தெரிவிக்க

"எப்போ மீண்டும் வருவாய் என
அப்பாவியாய் உன் மனம் வினாவ
நீயோ வாய் திறந்து பேசாமல்
மெளனித்திருப்பது ஏனோ

உன் மெளனம் எனை
இன்று சாகடிப்பது போல்
என் மரணமும் உனை
ஓர்நாள் சாகடிக்கும்

அதுநாள்வரை

எனைப் பார்க்கத் துடிக்கும்
உன் விழிகளிடமிருந்து
விடைபெற்றுச் செல்கின்றேன்

உன் மனம் என்னோடு
பேச முயன்றால்
உன் நினைவோடு இருக்கும்
என் மனசுக்கு அது புரியும்

உன் வாய்மொழி பேச்சால்

என் மீதான காதலை
என்றொருநாள் உதிர்ப்பாயோ
அன்று எனக்கு
சொல்லி அனுப்பு
அதை செவிமெடுக்க
உன்னருகில் நான் இருப்பேன்.

அதுவரையில்
உனைப் பிரிந்து
உன் மேலான காதலினால்
உருகிப்போயிருக்கும்
உன்னுயிர் காதலன்...!

Saturday, November 14, 2009

வீழும் தமிழ்...!!!

இன்றைய வேகமான நவீன விஞ்ஞான உலகில் தொழில் நுட்ப வளர்ச்சியினூடே தமிழ் மொழியும் ஆட்டம் கண்டபடி நகர்ந்து கொண்டுருக்கின்றது. அண்றாட வாழ்க்கையில் பல்வேறுபட்ட மொழிக் கலவையின் தலையீட்டினால் எம் தமிழ் மொழியும் கலப்படமாகிவருகின்றது...

"மெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ! இந்தவசையெனக் கெய்திட லாமோ?"

என்று என்றோ உரைத்த பாரதி கூற்று இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது.

பண்டைக் காலமதில் வழக்கத்திலிருந்த எத்தனையொ சொற்கள் இன்று மருவிப் போய்க் கொண்டிருக்கின்றன, இதற்கு யார் தான் காரணம்...??? நாமா இல்லை நாம் சார்ந்து வாழும் எமது சீமைக் கலாசாரமா...??? மழுங்கடிக்கப் படும் எம் தமிழைத் தூக்கி நிறுத்துவோன் எவனோ...??? மீண்டுமோர் பாரதி தேவை போலும்...!

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் கானோம்;
பாமரராய், விலங்குகளாய்,உலகனைத்தும்
இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்."

இப்படியும் கூறிச்சென்றான் கவியதனை... இன்றோ அதை செவிமடுப்பார் யாருமில்லை...
பண்டைய வீரத் தமிழதனில் எத்தனை எத்தனை அருமையான சொற்கள்... இன்று அவற்றுக்கு என்ன ஆகிவிட்டது??? எங்கே அவைகள்?? எம்மால் மறக்கப்பட்டு விட்டதா??? இல்லை மரிக்கப்பட்டு விட்டனவா??? விடையில்லா வினாக்கள்...
இருந்தும் எம் தமிழ் உறவுகளுக்காய் வழக்கொழிந்த வார்த்தைகள் சிலதை தேடி அறிந்து உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நிச்சயம் உங்களால் இவற்றை நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்......!!!

ஏ-9 பாதையில் பஸ்ஸில் பயணிக்க பாதுகாப்பு அனுமதி தேவையில்லை


ஏ9 பாதை ஊடாக இ.போ.ச. பஸ்களில் பயணிக்க இன்று முதல் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி ("கிளியரன்ஸ்") தேவையில்லை. பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

மக்கள் தமது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து இ.போ.ச பஸ்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யலாம்.

பாதுகாப்பு அமைச்சின் சார்பில் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யு.பி.பி. பெர்னாண்டோ இந்த விவரத்தை நேற்று அறிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஏ9 பாதையூடாக பயணம் செய்வோர் இதுவரை பாதுகாப்புத்தரப்பினரின் பயண அனுமதி ("கிளிய ரன்ஸ்") இன்றிப் பஸ்களில் பயணம் செய்ய முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை நீக்கப்பட்டதால் மக்கள் இருவழிப் போக்கு வரத்தையும் சுலபமாக மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ்களில் ஏ9 பாதையூடாக செல்லும் பயணிகள் வழமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பயணம் செய்ய இயலும் என்றும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விமானமூலம் பயணம் செய்வோருக்கு பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) நீக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் எதனையும் நேற்றிரவுவரை பெற இயலவில்லை.

Friday, November 13, 2009

உனக்காக.....!!!

அறிமுகம் இல்லாத எண்ணம்
மறைந்து போகும்
உன்னை கண்டால்…

இதழ் திறக்கும் மென்மை
உன் விழி சொல்லும் வார்த்தை
உன்னையே அறியாமல்
உன் குரலுக்கு நானும் ரசிகன்…

நெருக்கமான நினைவுகள் இல்லை
நம்முடன்
ஆனாலும் நெஞ்சில் சுமக்கபாரமில்லை…

உன் அகல விழி பார்வை
எனக்கும் பிடிக்கும்
அது பேசும் வார்த்தைக்காக
என் நட்பும் துடிக்கும்…

விடைபெறும்போது
அது சிந்திய
கண்ணீர் துளிகள்
எனக்கும் பாரம்…

நட்பில் பிரிவுகள் நிதர்சனம்
ஆனாலும் உனை பிரிந்த போது
சிறிய வருத்தம் மனதில்…

உன்னையே அறியாமல்
என் மேல் நீ வைத்திருக்கும்
நம்பிக்கை
சில நேரம் நீ சொல்லும்
“Anything u say hmmmm”
ஊமை பொருளின் உயிரோவியம்…

எத்தனை நாள் சுவாசம்
நான் அறியாதது
உன் புன்னகையின் வெளிச்சம்
என் நட்பையும் ஆளும்…

நெஞ்சில் அடைத்து வைத்த
சோகம் உனை தொடும் போது
தலை சாய்த்து கொள்ள
என் தோளும் இருக்கும்…

உன் பயணத்தில்
என் பாதச்சுவடுகளும் வாழும்…