Friday, November 13, 2009

உனக்காக.....!!!

அறிமுகம் இல்லாத எண்ணம்
மறைந்து போகும்
உன்னை கண்டால்…

இதழ் திறக்கும் மென்மை
உன் விழி சொல்லும் வார்த்தை
உன்னையே அறியாமல்
உன் குரலுக்கு நானும் ரசிகன்…

நெருக்கமான நினைவுகள் இல்லை
நம்முடன்
ஆனாலும் நெஞ்சில் சுமக்கபாரமில்லை…

உன் அகல விழி பார்வை
எனக்கும் பிடிக்கும்
அது பேசும் வார்த்தைக்காக
என் நட்பும் துடிக்கும்…

விடைபெறும்போது
அது சிந்திய
கண்ணீர் துளிகள்
எனக்கும் பாரம்…

நட்பில் பிரிவுகள் நிதர்சனம்
ஆனாலும் உனை பிரிந்த போது
சிறிய வருத்தம் மனதில்…

உன்னையே அறியாமல்
என் மேல் நீ வைத்திருக்கும்
நம்பிக்கை
சில நேரம் நீ சொல்லும்
“Anything u say hmmmm”
ஊமை பொருளின் உயிரோவியம்…

எத்தனை நாள் சுவாசம்
நான் அறியாதது
உன் புன்னகையின் வெளிச்சம்
என் நட்பையும் ஆளும்…

நெஞ்சில் அடைத்து வைத்த
சோகம் உனை தொடும் போது
தலை சாய்த்து கொள்ள
என் தோளும் இருக்கும்…

உன் பயணத்தில்
என் பாதச்சுவடுகளும் வாழும்…

Saturday, September 12, 2009

உனது விழிகளுக்குள் நான்

உன்னைப் பார்த்த நாள் முதலாய்
நான் நானாக இல்லை...!
உனது விழிகளுக்குள்
எனது விம்பம் தோன்றிய போது
என் மனதில்
ஆயிரம்பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறந்தன...!

என் மனதில் உன் விம்பம்
சஹானாவாக வீற்றிருந்தது..!
நான் இரவில் தூங்கும் போது
உன் எண்ணம் என்னை
பல பல வண்ணக் கனவுகளோடு
ஆக்கிரமித்துக் கொள்கின்றன...!

என் தூக்கம் கலைந்ததும்
நான் சுனாமியில் அகப்பட்ட
ஓடம் போல எங்கெங்கோ
உன்னை நினைத்து
அலைந்து திரிகின்றேன்...
மீண்டும் எனக்கு
தூக்கம் வரும் வரை....!!!