Friday, December 31, 2010

காகம் கத்தினா ஆக்கள் வருவினும் எண்டது உண்மையோ...???


சும்மா சொல்லக்கூடாதுங்க என்ன தான் கறுப்பா இருந்தாலும் நம்மாக்கள் காகத்த இன்னமும் முன்னுரிமை குடுத்து தான் வைச்சிருக்கிறாங்கப்பா. வெள்ளிக்கிழமை விரதமெண்டாலும் சரி சனிக்கிழமை விரதம் எண்டாலும் சரி காக்காக்கு சோறு வைச்ச பிறகு தான் நாமளே சாப்பிடுறம். அப்ப பாருங்களன் நிலமைய.

இண்டைக்கும் நான் பதியப்போற இந்த பதிவு முழுக்க முழுக்க காகத்தப் பற்றினது தானுங்கோ. அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரைக்கும் வீட்டு முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப் போகினும் எண்ட கருத்து இன்னமும் வழக்கத்தில தான் இருக்குது. தெரிஞ்சோ தெரியாமலோ யாரும் இத மறுக்க மாட்டினும் எண்டு நினைக்கிறன். அதுவும் தீவுப் பகுதிகளைச் சேந்தவராய் இருக்கட்டும், இல்ல யாழ்ப்பாணத்த சேந்தவரா இருக்கட்டும் அவங்க எல்லாரும் பரவலா இன்னமும் நம்பிறாங்க முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப்போறாங்க எண்டு.
இது எந்தளவுக்கு உண்மை எண்டது சரியாய் தெரியவில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் காகம் கத்தி வீட்டுக்கு விருந்தினர் வந்தும் இருக்கிறார்கள் அது தவிர மரணச் செய்திகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றான. அத விட வேற வேற விதமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தேறி இருக்கிறது. அதனாலேயே காகத்துக்கும் பிரிவுகள் வைச்சிருக்கிறாங்க நம்ம மூதாதேயர்கள். எப்பிடின்னு கேக்குறிங்களா அதாகப்பட்டது “வரத்துக் காகம், கூடாத காகம், செய்தி காகம்” இத விட வேற இருக்கோ தெரியல. எவ்வளவோ கண்டு பிடிச்சவே பெயரா வைச்சிருக்க மாட்டினும்.

கொழும்ப பொறுத்த வரையில காகம் கத்தி ஆக்கள் வாறது எண்ட கதைய சொன்னா காமடியா தான் இருக்கும் ஏன்னா இருக்கிறதே அதிகம் தட்டு வீடுகளில காகம் கார் பாக்கிங் பேஸ்மண்டில நிண்டு கத்தினா இருக்கிற எல்லா தட்டுக்கும் ஆக்கள் போவாங்களா இல்ல ஏதாச்சும் செய்தி தான் அவங்கள சென்றடையுமா... இப்பிடி நீங்க யோசிக்கிறது விளங்குது, அத விட காகம் கத்தி பொமிசன் குடுத்த தான் விருந்தாளிகள் வீடுகளுக்கு போகனும் எண்டு நியதியா என்ன அப்பிடி கேக்கிறதும் விளங்குதுப்பா... பட் நான் இத சரி எண்டு சொல்ல வரலையே...

ஆனா ஊர்ப் பகுதிகளில காகம் கத்துறத முழுமையாக நம்புகிறவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். கடந்த வாரம் நான் யாழ்ப்பாணம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற போது வேலை எல்லாம் முடிச்சு வெட்டி நிஜயம் கதைச்சுக் கொண்டு இருக்கேக்க வழக்கம் போல காகம் கத்திச்சு. அப்ப எங்க கை சும்மா இருக்குமோ ”ஹய் சூய்” ஒரே ஒரு சவுண்ட் தான் குடுத்தன் எடுத்துச்சு பாரு ஓட்டம். பட் சின்ன கப்ல திரும்பவும் வந்து கத்திச்சு, ஆனா இந்த தடவ நான் கலைக்கல. அப்ப என்னோட அம்மம்மா சொல்லுறா இது வரத்துக் காகம் போல இருக்கு தம்பி போய் முத்தத்தில அடி அளவடா எண்டா... அடி அளக்கிறது எண்டத அண்டைக்கு தான் நானே கேள்விப்பட்டன்.

அப்பிடின்னா என்னண்டே தெரியாது சோ நான் அதின்ர விளக்கத்த கேட்டன். அம்மம்மா அடி அளக்கிறதுக்கு விளக்கம் சொல்ல தொடங்கினா அதுவும் சும்ம இல்லிங்க ஒரு பாட்டோட விளக்கம் சொன்னா. அத கேக்கிறபோ எனக்கு ஏதோ வெண்பா கேக்கிற மாதிரி இருந்திச்சு. அதுக்கப்புறம் என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல.

அம்மம்மா காகம் கத்தினதுக்கு சொன்ன பாட்டு இது தான். பெரியாக்கள் அந்த காலத்தில எழுதினது கணிச்சது எல்லாம் இன்று வரையில் பொய்க்கவில்லை. இத நீங்களும் படிச்சு பாருங்களன்.

கருமகள் அழுத போது, கடுகவே அடி அளந்து
ஒரு பதும் இரண்டும் கூட்டி, ஓரேழு கீவராகில்...
வருவது
சுகம்
இலாபம்
மழை
படை
அயனம்
வெற்றி
கருதிய சாவுண்டன்று கணித்தனர் கலைவல்லானோர்...!!!

பொருள் :

கருமகள் - காகம்
கடுகவே - உடனே
ஒரு பதும் இரண்டும் - பன்னிரெண்டு
ஓரேழு - ஏழு
கீவராகில் - பிரித்தல்

அதாவது இதின்ர விளக்கம் என்னண்டா காகம் கத்தினா உடன முத்தத்தில போய் நிண்டா நீங்க நிக்கிற நிலையில இருந்து உங்கட நிழல் எவ்வளவு தூரத்துக்கு விழுதோ அந்த இடத்த குறிச்சு வைச்சிட்டு உங்க கால் பாதத்தால அந்த நிழலின்ர நுனிவரையில அளந்து வாற எண்ணோட பன்னிரெண்ட கூட்டி அத ஏழால பிரிச்சா வாறது அதாவது வாற மிச்சம் வாறது மேல சொன்ன ஒழுங்கு முறையில அமையுமாம் மிச்சமே வராவிட்டால் அது சாவு செய்தியாய் இருக்குமாம்.

ஆனாலும் இந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம் கொஞ்சம் வரணுமே அதாவது பாதத்தால அளந்துக்கிட்டு போறப்போ அடி அரைக் கணக்கில வந்தா என்ன செய்யிறது... சோ அப்பிடி அரைல வந்தா அந்த அரைய கணக்கில சேர்க்கிறதே இல்லையாம் Eg - 12 1/2 எண்டு வந்தா 12ஐ தான் கணக்கெடுக்கிறதாம். இன்னொரு சந்தேகம் மழை மப்பா இருந்தா எப்பிடி அடி அளக்கிறதாம்??? யோவ் மழை பெய்யிற நேரத்தில காகம் அடிக்கடி கத்துறத கண்டிருக்கிறியோ...? மூதாதேயர் என்ன முட்டாளுகளா... கொஞ்சம் பகுத்தறிவா யோசிக்கிறதில்ல... என்னையும் சேத்து தான்யா திட்டுறன்.... :P ஏன்னா எனக்கும் இப்பிடி சந்தேகம் வந்திச்சு... :)

சோ
உங்க ஊரில காகம் கத்தினா ஒருக்கால் இத ரை பண்ணிப் பாருங்க சரியா வந்தா சொல்லுங்க. சரி வரும் எண்டு நினைக்கிறன். முன்னோர் வாக்கு அமிர்தம் கண்டியளோ...!!!




10 comments:

  1. நாங்கள் கணக்கில வீக்கு பாஷ்..இதெல்லாம் சரிப்பட்டு வராது நம்மளுக்கு..

    ReplyDelete
  2. ஹ ஹ....
    அப்பிடி எல்லாம் சொல்லப்படாது... ரை பண்ணனும்...!!!!

    ReplyDelete
  3. நான் சொன்னாலும் நடக்குமா..??? ஹ..ஹ..ஹ...

    தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    அழியா வடுக்கள்

    ReplyDelete
  4. சொல்லிப்பாருங்க நடக்குதா எண்டு செக் பண்ணுவம்...!!! :)))

    :)

    ReplyDelete
  5. செக் பண்ணிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன்

    ReplyDelete
  6. வடிவாத்தான் சொல்லி இருக்கீயள்... நான் காகம் கரையக்கே இதைப் போலவே செய்து பாக்குறஞ் செரியே? பேந்து வாறன் போய்ட்டு...

    ReplyDelete
  7. நன்றிகள்...
    இப்ப இத ஒருக்கால் செய்து பாத்தா குறைஞ்சா போய்டுவியள்... குறும்பு தனமா செய்து பாக்கிறது தானேப்பா... :)

    ReplyDelete
  8. காகம் கத்துமா? காகம் கரையுமா? சிறுவயதில் காகம் கரையும் என்று படித்ததாக நினைவு.
    புதிய தகவல் பகிர்விற்கு நண்றி!!!!

    ReplyDelete
  9. நன்றி...

    காகம் கரையும் எண்டு புத்தகத்தில படிச்சிருக்கிறம் அது உண்மை தான்...
    பட் பேச்சு வழக்கில காகம் கத்துது எண்டு தானே சொல்லுறம்....!!!
    அத தான் நான் போட்டன் தோழா....!!!

    ReplyDelete