Saturday, September 5, 2009

உன் உயிரில் நான்


கண்கள் என்னை தேடுகின்றபோது
உன் விழிமலர நான் எதிரில் இல்லை !

சந்தோஷத்தை கொண்டாடுகின்றபோது
பகிர்ந்துக்கொள்ள நான் பக்கத்தில் இல்லை !

சோகங்களில் சோர்ந்து போகின்றபோது
ஆறுதலாக தலைகோதிட நான் அருகினில் இல்லை !

தனிமையில் உணர்கின்றபோது
துணையாக நான் உன்னுடன் இல்லை !

உறக்கமில்லா இரவுகளின்போது
மடிசாய்த்து தூங்கவைக்க நான் உன்னுடன் இல்லை !

இசையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க நான் உன்னுடன் இல்லை !

பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது
கருத்து பறிமாற்றத்திற்கு நான் உன்னுடன் இல்லை !

மனதின் ஆர்வம் குறைகின்றபோது
உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க நான் உன்னுடன் இல்லை !

ஆனால்நீ நினைக்கும்போது மட்டும்
இதயத்தில்.....
உணர்வுகளில்.......
உன் உயிரில் நான் இருப்பேன் !

















அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்கள்

இயந்திர மனிதன் பற்றிய ஆய்வுகள் எல்லா துறைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் Wales சிலுள்ள Aberystwyth பல்கலைகழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ரோஸ் கிங் மற்றும் அவரது குழுவினர் அறிவியலாளர் இயந்திர மனிதனை அதாவது இயந்திர அறிவியலாளரை உருவாக்கியுள்ளனர்.

Adam என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர அறியலாளர் தானாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முறையில் செயற்கை மதிநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை சீன வானொலி மூலம் நேயர்கள் ஏற்கென
வே கேட்டிருக்கிறீர்கள். தற்போதைய புதிய வரவு ஹெலிகாப்டர் அதாவது உலங்கு வானூர்தி இயந்திர மனிதன்.அறிவியலாளர்கள் இதனை ஆய்வுசெய்து தற்சார்பாக வடிவமைத்துள்ளனர். தொலைவிலிருந்து இயக்கக்கூடிய தொலைக்கட்டுபாட்டு கருவிகள் இன்றி தானாகவே இயங்குகின்ற அளவில் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் தயாரிக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பு.

அறிவியல் கழகத்தின் கீழ் இயங்கிவரும் Shenyang தன்னியக்க நிறுவனம், இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதனை இரண்டு மதிரிகளில் உருவாக்க நான்கு ஆண்டுகள் ஆய்வுசெய்து வடிவமைத்துள்ளது. அதில் பெரிய மாதிரி மூன்று மீட்டர் நீளம் உடையதாக ஏறக்குறைய சிறிய சீருந்து போன்று உள்
ளது. 120 கிலோ எடையுடைய இது, 40 கிலோ எடையை ஏற்றிச் செல்லக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நான்கு மணிநேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது. ஆனால் சிறிய மாதிரியோ 40 கிலோ எடையுடையதாக 15 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இதனுடைய அதிகபட்ச வேகம் ஒரு மணிநேரத்தில் 70 கிலோமீட்டர். நிழற்ப்பட கருவிகள் பொருத்தபட்டு
வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் வானில் மிதந்து பறந்து
கொண்டே பறவையின் பார்வையில் பொருட்கள் தெரிவது போன்ற பாணி
யில் மேலிருந்து நிழற்ப்படங்கள் எடுக்கக்கூடியது. மேலும், இலக்குகளை தானாகவே ஆராய்ந்து தேடி படமெடுக்கும் வசதியும் இதிலுண்டு.
பொதுவாக, காற்று ஒரு மணிநேரத்திற்கு 11 கிலோமீட்டர் திசைவேகத்திற்கு குறைவாக
வீசும்போது வானில் பறப்பதற்கான சோதனை ஆய்வுகள் நடத்தப்படுவதுண்டு. ஒரு பொருள் காற்றில் நகரும் திசையையும் வேகத்தையும் அளவிடும் அலகு தான் திசைவேகம் எனப்படுகிறது. இத்தகைய ஆய்வுக்கு உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் உதவும் என்று இந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலால் இயக்கப்படும் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன், ஏழு இலட்சம் முதல் 20 இலட்சம் யுவான் (அதாவது ஒரு இலட்சத்து ஈராயிரம் முதல் இரண்டு இலட்சத்து தொன்நுற்று ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது அமெரிக்க டாலர்) வரை விற்கப்படும் என்று சீனாவின் லியோனிங் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆய்வாளர் Wu Zhenwei தெரிவித்துள்ளார்.

இந்த உலங்குவானூர்தி இயந்திர மனிதனை சந்தைப்படுத்துவதற்கான எந்த திட்மும் இதுவரையில்லை. அதிகளவிலான உற்பத்தியை உருவாக்க, கூட்டு குழும நிறுவனங்கள் இந்நிறுவனத்தோடு இணைந்து செயல்படாததால், 20 முதல் 30 தொகுதிகள் என சிறிய அளவிலேயே இதன் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் ஆய்வுத் திட்டம் சீன நடுவண் அரசு நிதியின் ஊக்குவிப்போடு, 2006 ஆண்டி
ல் சீன தேசிய முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. தகவல்களை சேகரிப்பது, நிலநடுக்கம் நடந்த மற்றும் நச்சுவாயு கசியும் மோசமான சூழ்நிலையுள்ள இடங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதே, தேசிய
முக்கிய ஆய்வு திட்டப் பணிகளில் ஒன்றாக இது சேர்க்கப்பட்டதற்கு காரணமாகும். வேதியல் மருந்துகளை துவவும், வீசவும் உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் பயன்படுத்தப்படலாம்.