Tuesday, January 4, 2011

இஞ்சே இதுக்கு பேர் காதலாம்...!!!

காதல்” அட அட அட என்னே ஒரு அற்புதமான சொல்லடா... காதல் எண்டு சொல்லுறப்போவே சும்மா ஒரு லவ் பீலிங்ஸ் தோணுதேப்பா... நான் இப்ப லவ் மூட்ல இருக்கிறன். சோ காதலப் பற்றி தெரிஞ்சத சொல்லுறன். பட் என்னோட காதல் புனிதமானது. உண்மையானது. ஏன்னா நான் யாரையும் இன்னும் லவ் பண்ணல... :P ஆனா நம்ம ஊரில காதல் எண்டா புதுசு புதுசா அர்த்தம் இருக்குது போல. ஏன்னா ஆளாளுக்கு திணிசு திணிசாலவ் பண்ணுறாங்க. அதுக்கு பேர் வைச்சிருக்கினும் காதல் எண்டு. எனக்கு சரியா தெரியல அதுக்கு உண்மையான பெயர் காதல் தானோ எண்டு.

நான் கண்டது கேட்டது எல்லாத்தையும் சுமார சொல்லுறன் அதுக்கு அப்புறம் நீங்களே சொல்லுங்க உதுகள் பண்ணுறது காதலா இல்ல கறுமமா எண்டு...!
அண்ணைக்கு இப்பிடித்தாங்க எம்பாட்டுக்கு சிவனேண்டு பஸ்ல போய்க்கிட்டு இருந்தன் கொள்ளுப்பிடில எண்டு நினைக்கிறன், அப்போ சின்ன கப்ல ஒரு கப்பிள்ஸ் ஏறிச்சினும். பாக்கிறதுக்கு டீசண்டா தான் இருந்திச்சினும் எனக்கு தான் வெள்ள மனசாச்சே நல்லா இருக்கட்டும் எண்டு எனக்குள்ள வாழ்த்தி வாய மூடல முன்னாடி இருந்து பப்பிளிக்ல ச்சு.. ச்சு... நடத்திச்சுதுகள். நான் அப்பிடியே ஷோக்காய்ட்டன். என்ன ஒரு கிஸ். முடியல...

இதுக்கு அப்புறமும் அங்க இருந்தா எனக்கு அவமானமா போயிருக்கும் :P தெய்யாதினமா நான் இறங்க வேண்டிய ஹோல்ட் முன்னாடி எண்டதால தப்பிற்றன். அட இது பரவால்லிங்க எனக்கு ஒரு நீண்டகால சந்தேகம் உந்த பஸ்ஸில கடசி நீட்டு சீட்டில தொங்கல் மூலை ரெண்டும் கப்பிள்ஸ்க்கெண்டே ஃபிக்ஸ்ட் பண்ணிருக்கினுமோ.... சீரியஸ்சா தான் கேக்கிறன். சத்தியமா தெரியல.. ஏன்னா நான் போற பஸ் எல்லாத்திலையும் கட்டாயம் ஏதாச்சும் கப்பிள்ஸ் இருந்துக்கிட்டே தான் இருக்கினும். அது தான் கேட்டன். அதுவும் சும்மா இல்லிங்கோ அது தான் இங்க விசயம். :) லவ்ஸ் பண்ணினுமாக்கம். யாருக்கு தெரியும் அது என்னண்டு.

இன்னுமொரு றகம் இருக்குதுகள் எந்த நேரம் பாரு காதுகையே கை அட நான் என்ன சொல்லுறன் எண்டா எந்த நேரம் பார் ஃபோனும் கையும் தான். கதைக்கிறியள் தான் கதைக்கிறியள் அக்கம் பக்கம் யாராச்சும் எது கேட்டாலும் கொஞ்சமாவது பதில் சொல்லலாமே... இந்த கதைய கேளுங்களன் இதுவும் பஸ்சில தான். எப்ப பாரு பஸ்ச பற்றியே கதைக்கிறானே இவன் தான் கடசி சீட்ல இருந்து போறானோ எண்டு நீங்க நினைக்கிறது விளங்குது. யப்பா நான் அப்பிடி இல்லிங்கோ. ஐயோ சொல்ல வந்த விசயத்த எங்கையோ விட்டிட்டன் இதுக்கு தான் சொல்லுறது ஒரு மனிசன் ஏதாச்சும் சொல்ல வந்தா பொறுமையா இருந்து கேக்கணும் குறுக்க குறுக்க கண்டபடி யோசிக்க கூடா. இப்ப மறுபடியும் முதல்ல இருந்து. அப்ப நான் பஸ்சில இருந்தேனா ஒரு பொண்ணு காதுக்க ஃபோண வச்சபடியே வந்து உக்காந்துச்சா கொண்டைக்ரர் வந்தாரா நோனா சல்லி கண்ட எண்டாரா ஐயோ பாவம் அவர். சல்லி கண்ட சல்லி கண்ட இப்பிடியே கனக்க தரம் கேட்ட படி, ஆனா எங்க அந்த பொண்ணு இவர கணக்கெடுத்தது பிச்சக்காரன் பஸ்சுக்க நிண்ட கணக்கில பஸ் கொண்டைக்ரரே தன்ர பஸ்சில
கையேந்தி நிண்டாரு. அப்ப பாருங்களன் நிலமைய. இதுகள என்னண்டு சொல்லுறது.

சரி இத விடுங்க நீங்கெல்லாம் ப்பீச்சுக்கு போயிருப்பியள், அங்க நடக்கிற திருக்கூத்துகள பாத்திருப்பியள் எண்டு நினைக்கிறன். அங்க புதருகளுக்க நிக்கிற கப்பிள்ஸ்ச பாத்து தப்பா நினைச்சிடாதீங்க... அவங்க றொம்ப டீப்பா லவ்ஸ் பண்ணுறாங்க அது மட்டும் தான் சரியா. காதலர இப்பிடி தப்பா நினைக்க கூடாது. தே ஆர் பாவம். :P இத நான் சொல்லல அவங்க இந்த கூத்துக்கு பேர் காதல் எண்டு வைச்சிருக்கினும். சோ நாங்க அப்பிடி தான் நினைக்கனும். அடள்ஸ் ஓன்லி படங்கள கடக்கரையில பிறீ சோவா காட்டிக்கிட்டு இருக்குறாங்க.

ஆனா ஒண்டு இப்பிடியான செயலுகளுக்கு அவங்க வைச்ச பெயர் காதலாம். நீங்களும் அப்பிடியே வைச்சுக்கோங்க.

அட ச்சே....

இப்பிடியான இதுகளின்ர வேலையால உண்மையான காதலர்களும் இதுகள் றகத்துக்க சேத்து பாக்க வேண்டிய கட்டங்களும் சில நேரம் தோணுது. பண்றியோட சேந்த பசுவும் “ஏதோ தின்னும்” எண்ட பொன் மொழிக்க நிஜ காதலர்கள் சேராம விட்டா சரி.
ஆனாலும் அவங்க பண்ணுற இந்த வேலைகளை தப்பு எண்டு சொல்ல நான் யாரு. அதுவும் ஒரு வித காதலா இருக்கலாம் தானே... இத நான் சொல்லல அவங்க இதுக்கு இப்பிடி விளக்கம் தந்தாலும் ஆச்சரியம் இல்லப்பா...!
எப்பிடி எல்லாம் உயர்த்திவைக்கப்பட்ட காதல் கந்தலாகிக்கொண்டு போகுது போல... எண்டாலும் காதல் அழிவதில்லை பாருங்கோ...!!!

அனுபவம் போல பிறேம் எண்டு யாராச்சும் பின்னூட்டினியளோ அப்புறம் இருக்கு கச்சேரி உங்களுக்கு.... பிக்கோஸ் ஐயாம் பாவம்.... :P :P :P