Wednesday, February 16, 2011

கடற்கரை காமுகர்கள்

வேகாத வெய்யிலில்
உனக்கென்ன வேலை...
கடற்கரை மணல் தனிலும்
ஆங்காங்கு சோலை...
அதற்குள்ளும் நடக்குது பார்
தினம் காம லீலை...

நாலு சுவற்று
இன்பம் தனை
நாலுபேர் மத்தியிலும்
நாசுக்காய் செய்து
நாய்க் குணத்தை
காட்டுகிறான்...!

அடல்ஸ் ஓன்லி
திரைப் படத்தை
ஊர் பார்க்க
தானே
நடித்தும் காட்டுகிறான்...!

தம்மைப்
பெயர் சொல்லி
அழைக்கட்டுமாம்
அன்புள்ள
காதலர் என்று...
இவர்களா
காதலர்கள்
கண்டறியா
காமுகர்கள்...!

அவனைப் பிடித்து
கேட்டுப் பார்
அவுட் ஒவ் சிட்டி
என்பான்...
அவன் அருகில்
இருப்பது யார்
பக்கத்து வீட்டு
அன்ரி என்பான்...!

சம்பந்தமே இல்லாமல்
காம லீலை
நடக்குது பார்...
இந்த
இலட்சனத்தில்
ஓடி விளையாட
என் மகனை
அழைத்து இனி
கடற்கரை தான் போவது யார்...?

6 comments:

  1. நல்ல கவிதை :)பொது இடங்களில் இப்படி நடந்து கொள்வது தான் கொடுமை ...

    ReplyDelete
  2. நன்றி தோழா...!
    சிலரைத் திருத்தலாம்... சிலரை....???

    ReplyDelete
  3. இது எப்படி இருக்குனு சொல்லுங்க...

    கற்புக்கு பெயர் போன
    கண்ணகியின் சிலைக்குப் பின்
    காதலர்களின் சில்மிஷம்
    திருமணத்திற்கு முன்பே…

    காதல் தீ
    பற்றிக் கொள்ள
    அணைக்கின்றது
    காதலர் ஜோடி
    கண்ணகியின்
    கோபத்திற்கு ஆள்பட்டு
    சென்னை எரிந்தால்
    அணைப்பது யாரோ ?

    அதனால் தான்…
    மதுரையை எரித்த
    கண்ணகியின் சிலை
    கடற்கரைக்கு அருகில்
    சென்னையில்…
    அ(ணை)னைக்க
    வசதியாக இருப்பதால்…

    ReplyDelete
  4. //கற்புக்கு பெயர் போன
    கண்ணகியின் சிலைக்குப் பின்
    காதலர்களின் சில்மிஷம்
    திருமணத்திற்கு முன்பே…//

    கலக்கீட்டிங்க அண்ணை...!

    ReplyDelete
  5. மிக அருவருக்க வேண்டிய விஷயம். பொது இடம் என்பதால்.தனியாக வேறேங்காவது இவர்கள் போகலாம். கடற்கரைக்குப் போவதே அலுத்துவிட்டது.

    ReplyDelete
  6. நிச்சயமாக...!
    இவர்களால் நிம்மதியாக கடற்கரைக்கு போவதே இயலாத காரியமாக போய்விட்டது...!

    ReplyDelete