Saturday, November 14, 2009

ஏ-9 பாதையில் பஸ்ஸில் பயணிக்க பாதுகாப்பு அனுமதி தேவையில்லை


ஏ9 பாதை ஊடாக இ.போ.ச. பஸ்களில் பயணிக்க இன்று முதல் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி ("கிளியரன்ஸ்") தேவையில்லை. பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

மக்கள் தமது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து இ.போ.ச பஸ்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யலாம்.

பாதுகாப்பு அமைச்சின் சார்பில் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யு.பி.பி. பெர்னாண்டோ இந்த விவரத்தை நேற்று அறிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஏ9 பாதையூடாக பயணம் செய்வோர் இதுவரை பாதுகாப்புத்தரப்பினரின் பயண அனுமதி ("கிளிய ரன்ஸ்") இன்றிப் பஸ்களில் பயணம் செய்ய முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை நீக்கப்பட்டதால் மக்கள் இருவழிப் போக்கு வரத்தையும் சுலபமாக மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ்களில் ஏ9 பாதையூடாக செல்லும் பயணிகள் வழமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பயணம் செய்ய இயலும் என்றும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விமானமூலம் பயணம் செய்வோருக்கு பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) நீக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் எதனையும் நேற்றிரவுவரை பெற இயலவில்லை.

1 comment:

  1. நம்மட சனங்களுக்கு இவையள் நல்லதொரு வேலை பண்ணியிருக்கினம்.... மெத்த நண்றி..... அப்ப பாருங்களன்...!

    ReplyDelete