Saturday, November 14, 2009

வீழும் தமிழ்...!!!

இன்றைய வேகமான நவீன விஞ்ஞான உலகில் தொழில் நுட்ப வளர்ச்சியினூடே தமிழ் மொழியும் ஆட்டம் கண்டபடி நகர்ந்து கொண்டுருக்கின்றது. அண்றாட வாழ்க்கையில் பல்வேறுபட்ட மொழிக் கலவையின் தலையீட்டினால் எம் தமிழ் மொழியும் கலப்படமாகிவருகின்றது...

"மெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ! இந்தவசையெனக் கெய்திட லாமோ?"

என்று என்றோ உரைத்த பாரதி கூற்று இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது.

பண்டைக் காலமதில் வழக்கத்திலிருந்த எத்தனையொ சொற்கள் இன்று மருவிப் போய்க் கொண்டிருக்கின்றன, இதற்கு யார் தான் காரணம்...??? நாமா இல்லை நாம் சார்ந்து வாழும் எமது சீமைக் கலாசாரமா...??? மழுங்கடிக்கப் படும் எம் தமிழைத் தூக்கி நிறுத்துவோன் எவனோ...??? மீண்டுமோர் பாரதி தேவை போலும்...!

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் கானோம்;
பாமரராய், விலங்குகளாய்,உலகனைத்தும்
இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்."

இப்படியும் கூறிச்சென்றான் கவியதனை... இன்றோ அதை செவிமடுப்பார் யாருமில்லை...
பண்டைய வீரத் தமிழதனில் எத்தனை எத்தனை அருமையான சொற்கள்... இன்று அவற்றுக்கு என்ன ஆகிவிட்டது??? எங்கே அவைகள்?? எம்மால் மறக்கப்பட்டு விட்டதா??? இல்லை மரிக்கப்பட்டு விட்டனவா??? விடையில்லா வினாக்கள்...
இருந்தும் எம் தமிழ் உறவுகளுக்காய் வழக்கொழிந்த வார்த்தைகள் சிலதை தேடி அறிந்து உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நிச்சயம் உங்களால் இவற்றை நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்......!!!

2 comments:

  1. இது ஏற்கனவே நீண்ட காலமாக உள்ள பதிவர் ஒருவரின் சாயலில் உள்ள தளம் போன்று ஈயடிச்சான் கொப்பி போலத் தோற்றமளிக்கிறது. ஏற்கனவே அரைத்த மாவை அரைப்பதை விடுத்து வேறு முறையில் புதிதாக வடிவமைக்கலாமே???

    மதவடியான்..... முள்ளியான்

    ReplyDelete
  2. The persons minds can come across in a same way for a particular topic...

    if u can tel me other name "Tamil"??
    Tamil=Tamil

    ReplyDelete