குறிப்பாக சிந்தனை என்று வருகின்ற போது பல எண்ணற்ற சிந்தனைகள் ஒரு சில கணத்திலேயே தோன்றிவிடுகின்றன அதுவே குறிப்பிட்ட நாளை சந்தோஷமானதாக அல்லது குழப்பம் நிறைந்த நாளாக மாற்றிவிடுகின்றன. அதற்கான காரணங்கள் என பார்க்கப் போனால் சிலரது சிந்தனை கடந்த கால சம்பவங்களின் தொடர்ச்சியாக இருக்கும். அதாவது சிறிது காலத்திற்கு முன்னராக நடந்த சம்பவம் அவரவர் சிந்தையில் புதிய தொடர்ச்சியாக தோன்ற வாய்ப்புள்ளது, அது சில வேளைகளில் நல்லதாக இருக்க கூடும் சில வேளைகளில் கடுமையானதாக கூட இருக்க கூடும்.இதே போன்று வேலைக்கு செல்பவர்களின் மன நிலையை எடுத்துக் கொண்டால், ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும் போது ஒரு சிலர் மனதில் சடுதியாக தோன்றும் எண்ணம் ஐயய்யோ நாளைக்கு திங்கக்கிழமை, வேலைக்கு போகணும்... இப்படி அவர்கள் சிந்தனை சலிப்புடன் இருக்குமேயானால் அன்றைய நாள் அவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாய்ப்புக்கள் குறைவே!
எது எவ்வாறாயினும் வேலைத் தளங்களில் வேலையுடன் ஒருமித்துவிட்டால் இப்படியான சிந்தனைகள் கூட மழுங்கடிக்கப்பட்டுவிடும். எல்லாம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்களாகவே இருக்கின்றன.
அது தவிர்த்து சிலர் தமது சக வேலையாட்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறோம் என்றவாறே சிந்தனைக்குள் பயணிப்பர், இது கூட அவர்களை தேவையற்ற கற்பனைக்குள் அழைத்து சென்று முடக்கிவிட சாத்தியங்கள் அதிகமே.
இது போன்று இன்னும் பல வேறுபட்ட சிந்தனைகளை நாம் கண்டிருக்கின்றோம், ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் அளவுக்கு அதிகமான சிந்தனைகள் எழுவது சாத்தியமே. ஒருவரின் மனநிலையே அவரது சிந்தனையை வழிநடாத்துகின்றது, அதாவது ஒருவரது மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே பிரதிபலனாக குறிப்பிட்ட சிந்தனையை அடையாளப்படுத்துகின்ன்றது. இதுவே யதார்த்தமும் கூட.சிலர் மனதில் கெட்ட கீழான சிந்தனைகள் அரங்கேறும், ஆதலால் அவர்களது நாள், நடவடிக்கைகள் தவறான பாதையிலேயே பயணிக்க ஆரம்பிக்கும். ஒருவனை நல்லவனாக்குவதும் சிந்தனை தான், கெட்டவனாக்குவதும் சிந்தனை தான். எப்போதும் எண்ணம் உயர்வாக இருத்தல் வேண்டும் என பல ஆய்வுகளில் கண்டிருக்கிறோம். அது உண்மையே!
இந்த சிந்தனை சம்பந்தமான பதிவைப் படிக்கும் நீங்கள் உங்கள் மனதிடம் ஒரு கேள்வியைச் சடுதியாகக் கேளுங்கள், இந்த நிமிடம் எதுபற்றிய சிந்தனை உங்கள் மனதில் நிரையோடிக்கொண்டிருக்கின்றது என்பதை. அது ஏற்புடையதென்றால் தொடர்ந்து செல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...!
எல்லாம் யதார்த்தமே!
பெரிய மனுசன் போல கதைச்சிட்டன் எல்லா! மன்னிச்சூசூசூசூசூசூ...!

உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?
ReplyDeleteTamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை
மேலும் விபரங்களுக்கு
http://www.tamilpanel.com/
நன்றி
நன்றிகள் :)
ReplyDeletepadhivu nandru
ReplyDeletenandri
surendran
Nanrikal :)
ReplyDelete