Sunday, July 8, 2012

யாழில் பரவி வரும் பஸ் காமம்...!

மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணப் பதிவோடு உங்கள் முன் வருகின்றேன் என் பார்வையில் ஏற்பட்ட அவதானிப்பு இது. அன்றே கொட்டித்தீர்த்திருக்க வேண்டும், மடிக்கணினி கைவசம் இல்லாததால் கொஞ்சம் ஆற வைத்துப் பதிவிடுகின்றேன்.

யாழின் பதிவுகளை தினம் தினம் ஏதோ ஒரு வழியில் நாம் அறிந்து கொண்டே இருக்கின்றோம், தினம் மோசமடையும் யாழின் போக்கே இன்றைய நிலை. இதற்கான காரணங்களாக கலாசாரம், மற்றும் காதல் எனும் பெயரில் அரங்கேறும் காமம் என்பன காரணங்களாக் இருந்து வருகின்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட கலாசார நோயால் தினம் பாதிக்கப்படுவது என்னவோ எம் மக்களே, இதை நன்கு அறிந்தும் அதன் வழி மீள்ச்சியில்லாமல் தொடர்ந்து செல்லும் எம்மவர்கள் மீதும் தவறுகள் இருக்கின்றது.


யாழ்ப்பாணத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் நோக்கில் தினம் செயற்பட்டு வருகின்றன சில சக்திகள் அதற்கு துணை போகும் தமிழ் கறுப்பு ஆடுகள் இருக்கும் வரையில் தமிழ் தாழ்வாந்து போகும் என்பது திண்ணமே! படித்தோர் பெரியோர் இருந்தும் என்ன பயன். கெடுகிறேன் பந்தையம் பிடி எனும் போக்கில் போய்க் கொண்டிருக்கின்றது தமிழ் இளைஞர்களின் போக்கு.


சரி நான் சொல்ல வந்த விசயத்துக்கு வருகின்றேன்...! 


கொழும்பைப் பொறுத்தவரையில் பஸ்சில் காதல் என்ற பெயரில் காமம் என்பது சர்வ சாதாரணமாகிப் போனது என்பது உண்மையே! சராசரியாக ஒவ்வொரு பஸ்சிலும் காதலர்கள் மத்தியில் காமுகர்களும் பயணிக்கின்றார்கள். இப்படியான கேவலங்களைப் கொழும்பு பஸ்களில் பார்த்து சலித்து போய்விட்டோம்... இது இவ்வாறு இருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலும் இதே நிலை என நான் நினைத்திருக்கவில்லை, கலாச்சார மாற்றம் சடுதியாக இருக்கின்றது என்பதை நான் அறிவேன், ஆளில்லா வீடுகளில் காமம் அரங்கேறுவதை செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றேன் ஆனால் இந்த தொற்று வியாதி பஸ்சுக்குள்ளும் பரவும் என பெரிதாய் நினைக்கவில்லை! 


இதற்கு ராணும்வம் நடாத்தும் களியாட்ட நிகழ்வுகள், இராத்திரி நேர நிகழ்ச்சிகள், ஆபாச பட வினியோகம் என பல காரணங்களால் காதல் இளைஞர்கள் மத்தியில் காமமாக மாறியுள்ளது என்பதே உண்மை...! 


பஸ்சைப் பொறுத்தவரையில் கடைசி ஆசனம் என்பது காமுகர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவதானிப்புக்கள் மூலம் அறிய முடியும்! (எல்லா நேரமும் அல்ல) நான் யாழில் நேரில் கண்ட காமத்தை சொல்கிறேன் இது எவ்வளவு கேவலம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...! 
அதே கடைசி ஆசனம்!
ஒரு 45 வயசு மதிக்க தக்க பெண், பெண் என்று சொல்வதை விட அன்ரி என்று சொல்லலாம் 20 வயது மதிக்கத் தக்க பெடியன் (இவனுக்கென்ன மரியாதை பையன் எண்டு சொல்ல) கிட்டத்தட்ட அந்த அன்ரியின் மகன் எண்டு சொல்லிக்கலாம், அதுகள் ரெண்டும் கடைசியில் பண்ணிய காமலீலைகளை (Hidden Camera) நீலப் படத்துக்குள் சேர்க்கலாம்...! வெக்கம், மானம், சூடு, சுறணை இல்லாத பிறவிகள்...!

அன்று தான் தெரிந்து கொண்டேன் காமம் யாழில் வயது பேதம் இன்றி பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதை! மலசல கூட குழியில் குழந்தை, குப்பைத் தொட்டிக்குள் சிசு, கருக் கலைப்பு, தற்கொலை, ஏமாற்றம், கற்பழிப்பு என எல்லா வித மனம் கோணும் நிகழ்வுகளும் யாழில் அரங்கேறியது எப்போதிருந்து...? 

காமம் தொடர்பாக யாழ் மக்களிற்கு போதிய தெளிவின்மை என யாராச்சும் சொன்னியளோ வாயில சூடுவைப்பன்! ஏன்னா எங்கட சனம் ஒண்ணுமே தெரியாத பாப்பா தானே! ஏய்யா வாய கிளர்றீங்க...?

கலாச்சார காவலர்கள் எங்கே...? ஒரு காலத்தில் இருந்தார்களாம்! (ஒரு காலத்தில்)

கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் காமம் என்பது காதலின் பெயரால் மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு யார்மேலும் காரணம் சொல்ல விரும்பவில்லை, ஆனால் சுய புத்தி என்று ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன்! அது சில பேருக்கு சுய புத்தி சரியாக இயங்குவதில்ல போலும் ஆதலால் வந்த விளைவு...!

ஊசி இடம் கொடாமல் நூல் நுழையாது...! இது காமுகர் மொழி...! 

மனவருத்தத்தோடு விடைபெறுகின்றேன்...! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! என் அவதானிப்பு இது! உண்மையும் கூட!
10 comments:

 1. மண்ணின் பெருமை காக்கும் இந்திய தமிழ்நாட்டில் தொடங்கி எல்லா இடங்களிலும் நிலைம இது தான். யாழ்ப்பாணத்தை மட்டும் குறறம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

  ReplyDelete
 2. ம்ம்!
  எங்கும் இதே கேவலம் தான்...! ஆனாலும் யாழ்ப்பாணத்தில் இது தலையெடுக்க ஆரம்பித்தது அண்மைக் காலத்திலேயே...! //வருத்தத்திற்குரிய விடயம்//

  ReplyDelete
 3. வருத்தமான உண்மை...!
  யாழ்ப்பாணத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் நோக்கில் தினம் செயற்பட்டு வருகின்றன சில சக்திகள் அதற்கு துணை போகும் தமிழ் கறுப்பு ஆடுகள் இருக்கும் வரையில் தமிழ் தாழ்வாந்து போகும் என்பது திண்ணமே! !!சரியாகவே சொன்னீர்கள்.அழிகிறது என்று மிகவே புரிந்தும் மடுக்க முடியாதவர்களாகிவிட்டோமே..!

  ReplyDelete
 4. எம் இனத்தை அழிப்பதற்கு எம் எதிரிகள் எடுத்துள்ள மற்றுமோரு அரக்கத்தானமான அசிங்கப் போர். எம் கலாச்சாரத்தை சீரழிப்பதற்கு ஊந்து சக்தியாக ஆக்கிரமிப்பாளன் தெற்கில் உள்ள அசிங்க கலாச்சாரங்களை அள்ளிக் கொண்டு வந்து விதைத்ததன் பலன். எதிரி தான் செய்கின்றான் என்றால் எமது இனத்தின் ஊடகங்களும் கூட ராத்திரி ரகசிய களியாட்டங்களை இளையோர் மத்தியில் பாட்டும் கூத்தும் என்று விச விருட்சங்களாக பரவவிட்டுள்ளார்கள். இருக்கும் வரை எம் காவலர்களை திட்டித் தீர்த்தவர்கள் கூட இன்று அவர்களின் இடைவெளிக்காக வருந்துகின்றார்கள். காலம் கடந்த செயல். இனியும் இந்த அசிங்கங்கள் திருந்த அவர்கள் வருவார்களா? எதிர்பார்ப்புடன் ஏமாற்றத்துடன் அவமானத்துடன் காத்து நிற்கின்றோம்.

  ReplyDelete
 5. //வருத்தமான உண்மை...!
  யாழ்ப்பாணத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் நோக்கில் தினம் செயற்பட்டு வருகின்றன சில சக்திகள் அதற்கு துணை போகும் தமிழ் கறுப்பு ஆடுகள் இருக்கும் வரையில் தமிழ் தாழ்வாந்து போகும் என்பது திண்ணமே! !!சரியாகவே சொன்னீர்கள்.அழிகிறது என்று மிகவே புரிந்தும் மடுக்க முடியாதவர்களாகிவிட்டோமே..!//

  தடுப்பாரற்று தறிகெட்டு செல்கின்றது எமது ஈழம்...! மனக் குமுறல் இது! பார்க்கலாம்!!! என்ன தான் நடக்குமென்று...!

  ReplyDelete
 6. //எம் இனத்தை அழிப்பதற்கு எம் எதிரிகள் எடுத்துள்ள மற்றுமோரு அரக்கத்தானமான அசிங்கப் போர். எம் கலாச்சாரத்தை சீரழிப்பதற்கு ஊந்து சக்தியாக ஆக்கிரமிப்பாளன் தெற்கில் உள்ள அசிங்க கலாச்சாரங்களை அள்ளிக் கொண்டு வந்து விதைத்ததன் பலன். எதிரி தான் செய்கின்றான் என்றால் எமது இனத்தின் ஊடகங்களும் கூட ராத்திரி ரகசிய களியாட்டங்களை இளையோர் மத்தியில் பாட்டும் கூத்தும் என்று விச விருட்சங்களாக பரவவிட்டுள்ளார்கள். இருக்கும் வரை எம் காவலர்களை திட்டித் தீர்த்தவர்கள் கூட இன்று அவர்களின் இடைவெளிக்காக வருந்துகின்றார்கள். காலம் கடந்த செயல். இனியும் இந்த அசிங்கங்கள் திருந்த அவர்கள் வருவார்களா? எதிர்பார்ப்புடன் ஏமாற்றத்துடன் அவமானத்துடன் காத்து நிற்கின்றோம்.//

  நிதர்சன உண்மை இது! தற்போதைய அவல நிலையும் கூட! இளையோரின் கல்விக்கு முட்டு போட்டு கவனத்தை திசை திருப்பி எம்மை அடிமாடுகளாக்குவதற்கான மேடை அங்கே அமைக்கிறார்கள் பிணம் தின்னிகள்...! கேட்ப்பார் எவரோ...? விடியல் தேடி...!

  ReplyDelete
 7. ஈழத்தவர்கள் பல புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்களில் சிலர் ( பலர் ? ) பாலியல் சுதந்திரம் கிடைத்ததாக எண்ணி என்னென்னவோ செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.. அவர்கள் மூலமாக கூட ஈழத்தில் இக் கலாச்சாரம் புகுந்து இருக்கலாம் என நினைக்கின்றேன். சிங்களவர்கள் மத்தியில் இளம் பெண்கள் கருக்கலைப்பு அதிகரித்துள்ளன என்ற செய்தியும் கேள்விப் பட்டேன். அதுவும் ஒரு தாக்கமாக அமையலாம் . இப்படியான காம வெறிப் பிடித்தவர்கள் தமிழகத்திலும் உண்டு தான் !!!

  ReplyDelete
  Replies
  1. விளக்கத்திற்க்கு நன்றி திரு இக்பால் செல்வன். கால மாற்றத்தினை ஏற்று கொண்டு எல்லோரும் பக்குவம் அடைய வேண்டும்.தலிபான்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது.

   Delete
 8. //ஈழத்தவர்கள் பல புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்களில் சிலர் ( பலர் ? ) பாலியல் சுதந்திரம் கிடைத்ததாக எண்ணி என்னென்னவோ செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.. அவர்கள் மூலமாக கூட ஈழத்தில் இக் கலாச்சாரம் புகுந்து இருக்கலாம் என நினைக்கின்றேன். சிங்களவர்கள் மத்தியில் இளம் பெண்கள் கருக்கலைப்பு அதிகரித்துள்ளன என்ற செய்தியும் கேள்விப் பட்டேன். அதுவும் ஒரு தாக்கமாக அமையலாம் . இப்படியான காம வெறிப் பிடித்தவர்கள் தமிழகத்திலும் உண்டு தான் !!!//

  கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகின்றது இந்த காமம்! தினம் ஒரு செய்து காதல், காமம் பற்றியதாகவே விடிகின்றது! உங்கள் கருத்து உண்மைத் தன்மையைச் சாடி நிற்கின்றது... நன்றி கருத்திற்கு...! :)

  ReplyDelete
 9. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete